திருகோணமலை உப்புவெளி பிரதேச சபை தோற்கடிக்கப்பட்டு புதிய தவிசாளர் தெரிவு

0
திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் தோற்கடிக்கப்பட்டு இருந்த நிலையில் 15-01-2021 புதிய தவிசாளர்க்கான தெரிவு உள்ளூராட்சி ஆணையாளர் தலைமையில் இடம்பெற்றது. இதன்போது சபையின் 22 உறுப்பினர்களும் பங்கு கொண்டிருந்தனர்.
இவர்களில் இலங்கை தமிழரசுக் கட்சி சார்பில் திரு. தங்கராசா அவர்களும், இலங்கை பொதுஜன பெரமுன கட்சி சார்பில் திரு. ரத்தநாயக்க அவர்களும் தவிசாளர் பதவிக்காக முன்மொழியப்பட்டனர்.
இவர்களுக்கிடையிலான வாக்கெடுப்பின் போது திரு. தங்கராசா அவர்கள் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் 7 உறுப்பினர்களினதும், சுயேச்சைக் குழுவின் இரண்டு உறுப்பினர்களதும், ஐக்கிய தேசியக் கட்சியின் ஒரு உறுப்பினரினதும் ஆதரவை பெற்று பத்து வாக்குகளை பெற்று இருந்தார்.
எதிரணியில் திரு. ரத்நாயக்க அவர்கள் இலங்கை பொது ஜன பெரமுன, முஸ்லிம் காங்கிரஸ், ஐக்கிய தேசியக் கட்சி, ஈபிடிபி, SDPT, இலங்கை சுதந்திரக் கட்சி போன்றவற்றின் ஆதரவை பெற்று 12 வாக்குகளை பெற்று வந்தார்.
வாக்கெடுப்பின் இறுதியில் திரு. ரத்னாயக்க 2 பெரும்பான்மை மூலம் புதிய தவிசாளராக திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச சபைக்கு தெரிவு செய்யப்பட்டார்.
வாக்கெடுப்பில் SDPT, ஈபிடிபி கட்சி, இலங்கை சுதந்திரக் கட்சியை சேர்ந்த மூன்று தமிழ் உறுப்பினர்கள் திரு  ரத்தினக்க அவர்களுக்கு தங்கள் ஆதரவை செலுத்தியிருந்தனர்.

 

-திருகோணமலை செய்தியாளர்-

Leave A Reply

Your email address will not be published.