கொரோனா தடுப்பூசி எடுத்துக் கொண்ட பின் இந்தியாவில் இருவர் உயிரிழப்பு – அரசு என்ன சொல்கிறது?

0

கர்நாடகாவை சேர்ந்த ஒருவரும், உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரும் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட பின் உயிரிழந்துள்ளனர்.

இதில் உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்தவர் கொரோனா தடுப்பூசியால் இறக்கவில்லை என பிரேதப் பரிசோதனையில் தெரியவந்துள்ளதாக அரசு தரப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில்இ கர்நாடகாவை சேர்ந்தவரின் உடல் விரைவில் பிரேத பரிசோதனை செய்யப்பட உள்ளதாக ஏ.என்.ஐ முகhமை செய்தி வெளியிட்டுள்ளது.

கடந்த ஜனவரி 16-ம் தேதி இந்தியாவில் கொரோனா தடுப்பூசித் திட்டத்தைத் தொடங்கிவைத்தார் பிரதமர் நரேந்திர மோடி. கடந்த மூன்று நாட்களில் 3.81 லட்சம் சுகாதாரப் பணியாளர்கள் கொரோனா தடுப்பூசியை பெற்றுள்ளனர்.

அதில் 580 பேருக்கு கொரோனா தடுப்பூசியைப் பெற்றுக் கொண்ட பின் சில எதிர்வினைகளை வெளிப்படுத்தியுள்ளனர். அதில் ஏழு பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட வேண்டியிருந்ததாக மத்திய சுகாதார அமைச்சகம் நேற்று (ஜனவரி 18இ திங்கட்கிழமை) கூறியது.

கர்நாடகா மற்றும் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த இரு சுகாதாரப் பணியாளர்கள் கொரோனா தடுப்பூசியை செலுத்திக் கொண்ட பின் இறந்தது குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் விளக்கமளித்திருக்கிறது.

Leave A Reply

Your email address will not be published.