திருகோணமலை காந்திநகர் பிரதேசத்தில் கொரொனா தொற்றாளர்கள் தனிமைப்படுத்தல்

0

திருகோணமலை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிற்கு உற்பட்ட காந்தி நகர் பிரதேசத்தில் 17.01.2021 காலை மேற்கொள்ளப்பட்ட 156 அன்டிஜன் பரிசோதனைகளில் 16 பேர் பாதிக்கப்பட்டதாக முடிவுகள் வந்துள்ளதாக திருகோணமலை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக வட்டாரங்கள் தெரிவித்தன.

16.01.2021 காந்திநகர் பிரதேசத்தில் கொவிட்-19 தொற்று உறுதியான 20 வயதான நபர் மரண வீட்டிற்கு சென்று வந்ததன் அடிப்படையில் நேற்று மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் குறித்த நபரின் குடும்ப உறுப்பினர்கள் நான்கு நபர்களுக்கும் மொத்தமாக அப்பிரதேசத்தில் 16 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதுடன் அவர்கள் தனிமைப்படுத்தலுக்கும் உட்படுத்தப்பட்டுள்ளதாக திருகோணமலை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக வட்டாரங்கள் தெரிவித்தன.

இருப்பினும் காந்தி நகர் முற்றாக முடக்கப்படாமல் தொற்றாளர்கள் அவரவரது வீடுகளிளேயே தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளனர்.

-திருகோணமலை செய்தியாளர்-

Leave A Reply

Your email address will not be published.