திருகோணமலை பாலையூற்று பூம்புகார் பிரதேசம் முற்றாக முடக்கப்பட்டது

0

திருகோணமலை உப்புவெளி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பாலையூற்று பூம்புகார் பிரதேசத்தில் கடந்த வெள்ளிக்கிழமை அன்று கொரொனா

bty

தொற்றுக்குள்ளானவர் ஒருவர் கண்டுபிடிக்கப்பட்டதன் பின் அப்பிரதேசம் சனிக்கிழமை 16-01-2021 அன்று முற்றாக முடக்கப்பட்டது.  இந்நிலையில் பூம்புகார் பிரதேசம் முழுவதுமாக முடக்கப்பட்டு எவ்வித முன்னறிவிப்புமின்றி அன்டிஜன் பரிசோதனைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன. இதுவரை எடுக்கப்பட்ட அன்டிஜன் பரிசோதனைகளின் அடிப்படையில் பூம்புகார் பிரதேசத்தில் மொத்தமாக 241 அன்டிஜன் பரிசோதனைகள் இடம்பெற்றுள்ளன.

கடந்த இரண்டு நாட்களில் (15,16) 19 கொரொனாத் தொற்றுக்குள்ளானவர்கள் இனங்காணப்பட்டதுடன் இன்று நன்பகல் 12மணி வரை நடத்தப்பட்ட பரிசோதனைகளில் இரண்டு தொற்றாளர்களும் இனங்காணப்பட்டுள்ளதாக அங்கு கடமையில் இருக்கும் MOH அதிகாரி தெரிவித்துள்ளார்.

-சிம்பா-

Leave A Reply

Your email address will not be published.