திருகோணமலை கண்டி வீதியில் மட்டிக்களி மீன் வியாபாரிகள் கவனயீர்ப்பு போராட்டம்

0

19-01-2021 அன்று திருகோணமலை நகரசபையினால் பூங்கா அமைக்கும் பொருட்டு திருகோணமலை கண்டி  வீதி மட்டிக்களியில் போடப்பட்ட மீன் கடைகள் அகற்றப்பட்டன. அம்மீன் வியாபாரிகளின் கடைகள் அகற்றப்பட்டதால் தமது வாழ்வாதாரத்திற்கு உத்தரவாதம் கோரி கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். தமது வியாபாரத்தை நகர சபை தடை செய்ததால் பல்வேறு இன்னல்களுக்கு உள்ளாகி உள்ளோம் என்றும் மூன்று வருடங்களாக இந்த வீதி ஓரத்தில்தான் நாம் வியாபாரம் செய்து வருகின்றோம் என்றும் குறிப்பிட்டனர்.

தற்போது நகரசபையின் இச்செயற்பாட்டால் நாம் வருமானம் இன்றிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். எமக்கு வியாபாரம் செய்ய அனுமதிக்க வேண்டும். அல்லது பொருத்தமான இடத்தை ஒதுக்கித்தர வேண்டும். எமது குடும்பம் நடுத்தெருவில் நிற்க முடியாது என பல கோரிக்கைகளுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

-திருகோணமலை செய்தியாளர்-

Leave A Reply

Your email address will not be published.