திருகோணமலை நகர்ப்பகுதியில் காணிகள் பறிபோகும் அபாயம்

0

திருகோணமலை நகராட்சிமன்ற எல்லைக்குட்பட்ட பகுதியில் பராமரிப்பில்லாமல் பற்றைக்காடுகள் வளர்ந்து காணப்படுகின்றது. பராமரிப்பற்ற அக்காணிகளிலிருந்து கடந்த காலத்தில் பெய்த மழையின் பின்னர் டெங்கு நுளம்பு உண்டாகக்கூடிய வாய்ப்புக்கள் உள்ளன. மேலும் இவ்வாறான காணியிலிருந்து 5 அடி நீளமான புடையன் பாம்பொன்றை அக்காணியிலிருந்து பிடித்து நகராட்சிமன்றத்திற்கு கொண்டு வந்து காட்டியமை குறிப்பிடத்தக்கது.

எனவேஇ இவ்வாறான காணிகளை உடன் துப்பரவு செய்யும்படி அக்காணிகளில் அறிவித்தல் பலகை நகராட்சிமன்றத்தால் இடப்பட்டு வருகின்றது. அறிவித்தல் பலகை பொருத்தப்பட்ட நாளிலிருந்து இருவாரங்களுக்குள் அக்காணிகள் துப்பரவு செய்யப்படாதவிடத்து அக்காணிகள் நகரசபையால் துப்பரவு செய்யப்பட்டு அதன் செலவீனத்தை உரிமையாளரிடமிருந்து பெற நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. உரிமையாளர் பணத்தை செலுத்த தவறும் பட்சத்தில் அவருக்கெதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதுடன்இ அதனை தொடர்ந்து அக்காணியை நகராட்சிமன்றத்தால் சுவீகரிக்க நடவடிக்கையும் மேற்கொள்ளப்படும் என நகராட்சிமன்றத் தலைவர் தெரிவித்துள்ளார். திருகோணமலை நகராட்சி மன்றத்தின் இச் செயற்பாடு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

திருகோணமலை செய்தியாளர்

Leave A Reply

Your email address will not be published.