அக்காவின் கணவரை கோடாரியால் வெட்டிய மைத்துனன்

0

திருகோணமலை – மொரவெவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் ஒருவர் தனது அக்காவின் கணவரை கோடரியால் வெட்டியதாக குற்றஞ்சாட்டப்பட்டு கைது

செய்யப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் நேற்று (24-01-2021) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

மொரவெவ டி-06 பகுதியைச் சேர்ந்த 36 வயதுடைய ஒருவரே சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பாதிப்புக்குள்ளான நபர் திருமணம் முடித்து தனது மனைவியை பிரிந்து வாழ்ந்து வந்த நிலையில் பெண்ணின் தம்பி குறித்த நபரின் வீட்டுக்கு சென்றுள்ளார். அங்கு இருவருக்கும் ஏற்பட்ட கருத்து முரண்பாட்டில் சந்தேகநபர் கோடரியால் தனது அக்காவின் கணவரை வெட்டியதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

குறித்த நபர் கோடாரி வெட்டுக்கு இலக்கான நிலையில் வலது கையில் வெட்டுக் காயங்களுடன் பொலிஸ் நிலையத்திற்கு சென்றுள்ளார். அவரை தொடர்ந்து ச்தேகநபரும் பொலிஸ் நிலையத்துக்கு சென்றதாக தெரிய வருகின்றது.

வெட்டுக் காயங்களுக்கு உள்ளான நபர் மகதிவுல்வெவ பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ள நிலையில் லேதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக மொரவெவ பொலிசார் தெரிவிக்கின்றனர்.

-சிம்பா-

Leave A Reply

Your email address will not be published.