குச்சவெளி இளைஞர் கழக சம்மேளன பொதுக்கூட்டம் சுகாதார நடைமுறைக்கேற்ப நடைபெற்றது

0
தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் 2021 ம் ஆண்டுக்கான குச்சவெளி பிரதேச இளைஞர் கழக சம்மேளன தெரிவுக் கூட்டம் பிரதேச இளைஞர் சேவை அதிகாரி திரு. சுஜீவ குமார அவர்களின் ஒருங்கிணைப்பில்,  குச்சவெளி பிரதேச இளைஞர் கழக சம்மேளனத்தின் தலைவர் T.அஹமட் கியாஸ் அவர்களின் தலைமையில் தற்போதைய Covid-19 சூழ்நிலையை கருத்தில் கொண்டு சுகாதார நடைமுறைக்கேற்ப நேற்று (24.01.2021) ம் திகதி காலை 10.30 மணிக்கு  பிரதேச செயலக கலாச்சார மண்டபத்தில் இறைவணக்கத்துடன் ஆரம்பமானது.
 இந் நிகழ்வில் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் திருகோணமலை மாவட்ட உதவிப் பணிப்பாளர் திரு.மகிந்த மற்றும் இளைஞர் சேவை அதிகாரி ஜனாப். A.L.அலாவுதீன் பாபு மற்றும் பிரதேச சம்மேளன உறுப்பினர்கள், இளைஞர் கழகங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
இதன் போது உரையாற்றிய   பிரதேச சம்மேளன தலைவர், கடந்த காலங்களில் பிரதேச சம்மேளனத்தின் மூலம் பெரியகுளம் தொடக்கம் புல்மோட்டை வரையான பகுதிகளில் செய்யப்பட்ட இளைஞர் அபிவிருத்தி வேலைத் திட்டங்கள், இளைஞர் ஊக்குவிப்பு செயற்பாடுகள் தொடர்பாகவும் தெளிவு படுத்தப்பட்டதுடன் அச் செயற்பாடுகளுக்கு பூரண  ஒத்துழைப்பு வழங்கிய அனைவருக்கும் நன்றிகளை  தெரிவித்தார்.
அதனை தொடர்ந்து அதிக வாக்குகளைப் பெற்று 2021 ம் ஆண்டுக்கான புதிய தலைவராக  K.அப்துல் ஹக் (றிபாஸ்) தெரிவு செய்யப்பட்டார். தொடர்ந்து ஏனைய நிருவாக சபை தெரிவுகளும் வெற்றிகரமாக நிறைவு பெற்றது.

Leave A Reply

Your email address will not be published.