திருகோணமலையில் அதிகரித்துவரும் கொரோனா, மக்கள் பதட்டத்தில்

0

திருகோணமலை நகரில் நகர பொது சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்கு உட்பட்ட டைக் வீதியில் மேலும் இருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதாகவும், திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட 72 வயதான நபருக்கும் கொவிட் – 19 தொற்று உறுதியானதாக திருகோணமலை நகர பொது சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக வட்டாரங்கள் தெரிவித்தன.

கடந்த வாரம் திருகோணமலை பொது வைத்தியசாலையில் உருவான கொவிட் – 19 தொற்றாளர்களுடனான தொடர்பை பேணிய நபர்களுக்கான பீசிஆர் பரிசோதனைகளின் கிடைக்கப்பெற்ற முடிவுகளின் அடிப்படையில் திருகோணமலை பொது வைத்தியசாலையில் ஒருவருக்கு கொவிட் – 19 தொற்று இன்று (26-01-2021) உறுதிசெய்யப்பட்ட நிலையில் அவருடனான தொடர்பில் உள்ளவர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் கொவிட் – 19 தொற்றாளரின் 15 வயது மகனுக்கு கொவிட் – 19 தொற்று உறுதியானது.

மேலும் நேற்று பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக வந்த ஆனந்தபுரியை சேர்ந்த 72 வயதானவருக்கு வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் கொவிட் – 19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டதாக திருகோணமலை நகர பொது சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக வட்டாரங்கள் தெரிவித்தன.

கொவிட் – 19 தொற்று உறுதியான தொற்றாளர்களை பொருத்தமான கொரோனா மத்திய நிலையத்திற்கு அனுப்பி வைக்க நடவடிக்கை மேற்கொள்வதாக திருகோணமலை மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் அலுவலகம் ஈடுபடுகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

-சிம்பா-

Leave A Reply

Your email address will not be published.