திருமலையில் சமூகவிரோத செயல்களில் ஈடுபட்ட முக்கிய குழு உறுப்பினர்கள் கைது

0

 

திருகோணமலை தேவாநகர் மற்றும் ஆனந்தபுரி பகுதிகளில் ‘குட்டிப்புலி’ எனும் ரெளடி குழுவின் 05  உறுப்பினர்கள் இன்று (28-01-2021) கைது செய்யப்பட்டுள்ளனர். கடற்படையின் புலனாய்வுத்துறை வழங்கிய தகவலின் அடிப்படையில் போலிஸ் விஷேட படையினர் இன்று இவர்களைக் கைது செய்துள்ளனர். முதலாவது நபர் தேவாநகரில் கைதுசெய்யப்பட்ட போது 01வாள், 12 தொலைபேசிகள், 05 சிம்கள், கமரா பலவந்தமாக பெற்றுக்கொள்ளப்பட்ட வெளிநாட்டு கடவுச்சீட்டு மற்றும் தேசிய அடையாள அட்டை என்பன கைப்பற்றப்பட்டன.

இவரைக் காப்பாற்ற குட்டிப்புலி குழுவின் ஏனையோர் முயற்சி செய்த போது மேலும் 04 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நால்வரும் தேவாநகர் ஆனந்தபுரியினைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இக்குழு பிரபலமான ஒருவரது தலைமையில் செயற்படுவதாக குறிப்பிடப்படுகின்றது. மேலும் இவர் வேறு பெயர்களாலும் அழைக்கப்படுகின்றார் என போலிஸ் விஷேட அதிரடிப்படையினர் தெரிவிக்கின்றனர். கைது செய்யப்பட்ட ஐவரும் உப்புவெளி போலிஸில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

-சிம்பா-

Leave A Reply

Your email address will not be published.