பாலர் பாடசாலை ஆசிரியர் மற்றும் பிள்ளைகளை பராமரிப்பவருக்கு பொசிட்டிவ்

0

திருகோணமலை லிங்கநகர் பிரதேசத்தில் இன்று (28-01-2021) லிங்கநகர் பாலர் பாடசாலை ஆசிரயர், அவரது கணவர் மற்றும் பாலர்பாடசாலையில் பிள்ளைகளை பராமரிப்பவர் உட்பட மூன்று நபர்களுக்கு கொவிட்19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டதாக உப்புவெளி பொது சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக வட்டாரங்கள் தெரிவித்தன.

மேலும் இன்று திருகோணமலை நகர பொது சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையில் மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் திருக்கடலூர் பிரதேச தாய் மற்றும் பெண்பிள்ளை ஒருவருக்கும் கொவிட்19 தொற்று உறுதியானதாக திருகோணமலை நகர பொது சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக வட்டாரங்கள் தெரிவித்தன.

மேலும் உப்புவெளி பொது சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிரதேச பூம்புகார் பிரதேசத்தில் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த இரு பெண்களுக்கும் அதே பிரதேசத்தைச்சேர்ந்த ஆண் ஒருவருக்கும் கொவிட்19 தொற்று உறுதியானதாக உப்புவெளி பொது சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக வட்டாரங்கள் தெரிவித்தன.

கொவிட்19 தொற்று உறுதியானவர்களில் பெண்கள் அனைவரையும் குச்சவெளி கொரோனா மத்திய நிலையத்திற்கும் ஆண்கள் அனைவரையும் ஈச்சிலம்பற்று கொரோனா மத்திய நிலையத்திற்கும் இன்று மாலை அனுப்பி வைத்ததாக திருகோணமலை மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் அலுவலக வட்டாரங்கள் தெரிவித்தன.

-திருகோணமலை செய்தியாளர்-

Leave A Reply

Your email address will not be published.