மீன் சந்தை வரிப்பணம் செலுத்தாமையைக் கண்டித்து அடையாள உண்ணாவிரதம்

0

திருகோணமலை நகரத்தில் உள்ள மொத்த மீன்சந்தையின் வரிப்பணம் இதுவரை காலமும் நகரசபைக்கு செலுத்தப்படாமையை கண்டித்தும், அதனை விரைவில் நகர சபையின் அதிகாரத்தின் கீழ் கொண்டுவருமாரும் கோரி இன்று (29-01-2021) நகரசபை உறுப்பினரும் SDPT (மெழுகுவர்த்தி) கட்சியின் திருகோணமலை செயலாளருமான திரு.சி.சிவகுமார் (சத்தியன்) அவர்களால் திருகோணமலை நகரசபையின் முன்பாக அடையாள உண்ணவிரதம் மேற்கொள்ளப்பட்டுக் கொண்டிருக்கிறது.

மேலும் திருகோணமலை நகர மணிக்கூண்டு அருகே உள்ள அதிக வருமானம் ஈட்டும் மொத்த மீன் சந்தை 2012ம் ஆண்டு முதல் கடற்தொழில் கூட்டுத்தாபனத்தின் கீழ் செயற்பட்டாலும் 2016 வரை 40% வரியே செலுத்தப்பட்டுள்ளதாகவும் அதன்பின் வரி செலுத்தப்படவில்லை எனவும் அதற்கான பிரேரணை தன்னால் முன்மொழியப்பட்டும் சம்மந்தப்பட்டவர்களுக்கு மனு அனுபப்பட்டும் எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை எனவும் அதற்கான தீர்வை வேண்டியே இவ்வுண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக திரு.சி.சத்தியன் அவர்கள் தெரிவித்திருக்கின்றார்.
-திருகோணமலை செய்தியாளர்-

Leave A Reply

Your email address will not be published.