கன்னியா உப அஞ்சல் அலுவலகம் தற்காலிகமாக மூடல்

0

திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச சபைக்கு உற்பட்ட கன்னியா பிரதேச உப அஞ்சல் அலுவலகத்தில் கடமை புரியும் ஊழியர் ஒருவருக்கு கொவிட்19 தொற்று உறுதியானதை அடுத்து உப அஞ்சல் அலுவலகம் தற்காலிகமாக மூடப்பட்டது என பட்டினமும் சூழலும் பிரதேச பொது சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக வட்டாரங்கள்தெரிவிக்கின்றன.

தொற்று உள்ளானவருடன்  தொடர்பினை பேணியவர்களுக்கு மேற்கொண்ட அன்டிஐன் பரிசோதனையில் தொற்றாளரின் மனைவிக்கும் கொவிட்19 தொற்று உறுதியானதை அடுத்து அவர்கள் வசிக்கும் திருகோணமலை தில்லைநகர் வாசல்தலம் தனிமைப்படுத்தப்பட்டது.

மேலும் நேற்று திருகோணமலை நகர பொது சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையில் மேற்கொள்ளப்பட்ட அன்டிஐன் பரிசோதனையில் திருகோணமலை நகரில் ஔவையார் விதியில் வசிக்கும் முச்சக்கர வண்டியின் சாரதி ஒருவருக்கு கொவிட்19 தொற்று உறுதியானதை அடுத்து அவரின் குடும்பம் தனிமைபடுத்தப்பட்டு இன்று (01-02-2021) காலை குறித்த தொற்றாளரின் குடும்பத்திற்கு நகர பொது சுகாதார வைத்திய அதிகாரி குழுவினரால் மேற்கொள்ளப்பட்ட அன்டிஐன் சோதனையில் தொற்றாளரின் இரு மகன்மாருக்கு கொவிட்19 உறுதிசெய்யப்பட்டது.

அவர்கள் வசிக்கும் வீட்டு வளவு தனிமைப்படுத்தப்பட்டதுடன் குறித்த வளவில் வசிக்கும் நபர்களுக்கு அன்டிஐன் மற்றும் பிசிஆர் பரிசோதனைகளை மேற்கொள்ள திருகோணமலை நகர பொது சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் ஈடுபடவுள்ளதாக நகர பொது சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக வட்டாரங்கள் தெரிவித்தன .

 

மேலும் தொற்று உறுசெய்யப்பட்டவர்களை பொருத்தமான கொரோனா தனிமைப்படுத்தல் நிலையத்திற்கு அனுப்புவதற்கான நடவடிக்கையில் திருகோணமலை மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் அலுவலகம் ஈடுபடுகின்றது

-சிம்பா-

Leave A Reply

Your email address will not be published.