கன்னியா வெந்நீர் ஊற்றுப்பகுதிக்குள் செல்ல தடை விதிப்பு

0
திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச சபைக்கு உட்பட்ட கன்னியா வெந்நீர் ஊற்றுப்பகுதிக்குள் 30-01-2021 அன்று கொரோனா தொற்றாளர்கள் வந்து போனதாக தகவல் பரவியதை அடுத்து வெந்நீர் ஊற்றுப்பகுதிக்குள் செல்வதற்கு  31-01-2021 அன்று தடை விதிக்கப்பட்டுள்ளது.
வெளிநபர்கள் உள்ளே செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக பிரதான வாயில் கதவில் நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளதுடன் வாயிலிலும் உள்ளேயும் உப்புவெளி பொலிஸார் காவல் கடமையில் ஈடுபடுவதை அவதானிக்க முடிந்தது.
-சிம்பா-

Leave A Reply

Your email address will not be published.