திருகோணமலை டிடி சந்தியில் ஆர்பாட்டம்

0
திருகோணமலை துறைமுக ஊழியர்கள் இன்று (01.02.2021) கொழும்புத் துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை இந்தியாவிற்கு விற்கப்படுவதை எதிர்த்து திருகோணமலை மட்டகளப்பு வீதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
துறைமுக ஊழியர்களின் திருகோணமலை துறைமுகத்தின் வாசலில் ஆரம்பித்த நடைபவனியானது திருகோணமலை மட்டக்களப்பு வீதியில் உள்ள டிடி சந்தியை அடைந்து அங்கு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை இந்தியாவிற்கு வழங்குவதற்கு எதிராக துறைமுக ஊழியர்களினால் கோஷங்கள் எழுப்பி ஆரபாட்டத்தில் ஈடுபட்டதை அவதானிக்க முடிந்தது
மேற்குறித்த ஆர்ப்ட்டமானது நண்பகல் 12 மணிக்கு ஆரம்பித்து 1 மணியளவில் நிறைவடைந்தது. மேலும் குறித்த ஆர்பாட்டத்தில் 150 மேற்பட்ட துறைமுக ஊழியர்கள் ஈடுபட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.