கலாசார திணைக்களத்தினூடாக வழங்கப்படும் சுவதம் கெளரவிப்பு பொருள் வழங்கி வைப்பு

0

கிண்ணியா பிரதேச செயலகத்துக்குட்பட்ட கலைஞர்களை கெளரவப்படுத்துமுகமாக 2020 ஆண்டுக்கான சுவதம் பரிசுப் பொருள் 03-02-2021 அன்று பிரதேச செயலாளர் தலைமையில் வழங்கி வைக்கப்பட்டது.

கிண்ணியா பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள இது வரை தெரிவு செய்யபபடாத 10 கலைஞர்களுக்கு 03-02-2021 மாலை 3.00 மணியளவில் கிண்ணியா பிரதேச செயலகத்தில் வைத்து 3000 ரூபா பெறுமதியான உலர் உணவுப் பொருட்களை கிண்ணியா பிரதேச செயலாளர் எம்.எச்.முகம்மது ஹனி வழங்கி வைத்தார்.

மருத்துவிச்சி, முறிவு வைத்தியம், சீனடி, கைப்பணி, பாடகர், இலக்கியத் துறைகளிலுள்ள கலைஞர்கள் தெரிவு செய்யப்பட்டு வழங்கப்பட்டது. கலாசார திணைக்களத்தினால் வழங்கப்படும் கலைஞர்களுக்கான அடையாள அட்டையும் வழங்கி வைக்கப்பட்டது. இதன் போது கலாசார உத்தியோகத்தர் திருமதி.தாமரைமணானன் லலிதாதேவி, இந்து கலாசார உத்தியோகத்தர் சுகன்யா மகாதேவா, கலாசார உத்தியோகத்தர் திருமதி. சந்தியவாணி சுகிணன் மற்றும் முஸ்லீம் கலாசார உத்தியோகத்தர் ஆர்.நிம்ஷாட் ஆகியோர் கலந்து கொண்டு வழங்கி வைத்தனர்.

Leave A Reply

Your email address will not be published.