காணாமல் ஆக்கப்பட்டோருக்காக உண்ணாவிரதம்

0
bty

2008-02-04ம் திகதி கடந்த யுத்த காலத்தில் காணாமல்போனரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் இலங்கையின் சுதந்திர தினமாகிய 2021-02-04 அன்று சுழற்சி முறையில் உணவு தவிர்ப்பு போராட்டத்தினை திருகோணமலை இறை இரக்க தேவாலயத்தின் முன்பாக மேற்கொண்டுள்ளனர்.

மேலும் இவர்கள் காணாமல் போனோர் தொடர்பான தகவல்களை வெளிப்படுத்துமாறு பலமுறை அரசாங்கத்திற்கு கடிதம் எழுதியும், மனுக்கொடுத்தும் எவ்வித பயனுமில்லை என்றும் சர்வதேசம் தமது கோரிக்கையினை ஏற்றுக்கொண்டு காணாமல் போனோர் தொடர்பான தகவல்களை பெற்றுத்தருமாறும் கேட்டுக்கொண்டுள்ளனர். 14 வருடங்களுக்கு முன்பு காணாமல் போனோர் இதுவரை கிடைக்காமையினால் இன்றைய சுதந்திர தினத்தினை கறுப்புநாளக அனுஷ்டிப்பதாகவும் அவர்கள் தெரிவித்திருந்தார்கள்.

-சிம்பா-

Leave A Reply

Your email address will not be published.