குறிஞ்சாக்கேணி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பெயர்ப்பலகை திறந்துவைப்பு

0

கிண்ணியா குறிஞ்சாக்கேணி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தை சுட்டிக்காட்டும் ஒரு பெயர்ப்பலகை இதுவரை இல்லாமையினால் அங்கே வருகை தரக் கூடிய பொதுமக்கள், கர்ப்பிணி தாய்மார்கள், பாலூட்டும் தாய்மார்கள் பல அசௌகரியங்களையும் இன்னல்களையும் எதிர் கொண்டு வருவதை காணலாம். இந் நீண்டகாலப் பிரச்சினையை உணர்ந்த சுகாதார வைத்திய அதிகாரி அஜீத் அவர்கள் உடனடியாக அதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொண்டதன் விளைவாக 04-02-2021 அன்று பெயர் பலகை வைக்கப்பட்டது.

தற்காலிகமாக இயங்கி வரும் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்துக்கான புதிய கட்டடம் அமைக்கப்படும் வரை இப்பெயர்ப்பலகை மக்களின் நலனுக்காக வைக்கப்பட்டுள்ளது.

-சிம்பா-

Leave A Reply

Your email address will not be published.