நகைக்கடையொன்றில் கொள்ளை! – விசாரணைகள் ஆரம்பம்

0

திருகோணமலை என்.சீ வீதியில் நகைக்கடையொன்றில் நகை மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது. இந்த சம்பவம் 10-02-2021 இரவு 7.15 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

நகைக்கடைக்கு வாள்களுடன் வந்த குழுவினர் உட்சென்று பயமுறுத்தி நகை மற்றும் பணத்தினை கொள்ளையிட்டு கடல் மார்க்கமாக படகில் ஏறிச் சென்றுள்ளதாக தெரியவருகின்றது.

குறித்த கொள்ளை சம்பவம் தொடர்பில் திருகோணமலை தலைமையக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை நகைக்கடையில் கொள்ளையிடும் காட்சி அடங்கிய சிசிடிவி காணொளியை பொலிஸார் பெற்று விசாரணைகளை தீவிரப்படுத்தி உள்ளதாகவும் தெரியவருகின்றது.

-சிம்பா-

Leave A Reply

Your email address will not be published.