மாகாணக் கல்வித்திணைக்கள நிர்வாக பிரிவின் 8 உழியர்களுக்கு கொவிட்19

0

திருகோணமலை மாகாண கல்வி திணைக்கள நிர்வாகப்பிரிவு ஊழியர் ஒருவருக்கு திருகோணமலை பொது வைத்தியசாலையில் நேற்று எடுக்கப்பட்ட அன்டிஐன் பரிசோதனையில் கொவிட்19 தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் அவருடன் தொடர்பை பேணியவர்கள் சுமார் 50 பேருக்கு 11.02.2021அன்று நகர பொது சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையில் மேற்கொள்ளப்பட்ட அன்டிஐன் பரிசோதனையில் மாகாணக் கல்வித் திணைக்கள நிர்வாகப்பிரிவு ஊழியர்கள் 7 பேருக்கும் அவர்களின் குடும்ப  உறுப்பினர்கள்  3 நபர்களுக்கும் கொவிட்19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டதாக நகர பொது சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக வட்டாரங்கள் தெரிவித்தன.

தொற்றாளர்களுடன் தொடர்புகளை பேணியவர்கள் தனிமைப்படுத்தப்பட்டதுடன் தொற்றாளர்களை மட்டகளப்பு பெரிய கல்லாறு கொரோனா மத்திய நிலையத்திற்கு அனுப்பி வைக்க நடவடிக்கை மேற்கொள்வதாக திருகோணமலை மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் அலுவலகம் தெரிவித்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.