நடைமுறைக்கு வந்தது கொழும்பு துறைமுக சட்டமூலம் – கையெழுத்திட்டார் சபாநாயகர்

0

கொழும்பு துறைமுகநகர பொருளாதார சட்டமூலத்திற்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன கையெழுத்திட்டுள்ளார்.

இன்று முற்பகல் 11.30 மணியளவில் சபாநாயகர் இந்தச் சட்டத்தில் கையெழுத்திட்டார் என்று சபாநாயகர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இதனடிப்படையில் குறித்த கொழும்பு துறைமுகநகர பொருளாதார நகர ஆணைக்குழு சட்டம் தற்போது முதல் நடைமுறைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 20 ஆம் திகதி நாடாளுமன்றில் 91 மேலதிக வாக்குகளினால் கொழும்பு துறைமுகநகர சட்டமூலம் நிறைவேற்றப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.