உணவு வாங்க பணமில்லை! வவுனியாவில் அவதிப்படும் மக்கள்

0

பயணத்தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் மக்களது கையில் பணமின்றி பொருட்களை வாங்க முடியாது அவதிப்படும் நிலை வவுனியாவில் உருவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நீண்ட நாட்களாக பயணத்தடை விதிக்கப்பட்டுள்ளமையால் நாளாந்த கூலித்தொழிலாளர்கள் உட்பட நாளாந்தம் வருமானம் பெறுபவர்கள் உணவுப்பொருட்களை பெற முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதுடன் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரைத் தவிர வேறு எவரும் தமது நிலை தொடர்பில் கவனம் செலுத்தவில்லை எனவும் பொது மக்கள் தெரிவித்துள்ளனர்.

வவுனியாவில் ஈஸ்வரிபுரம், சுந்தரபுரம் உட்பட்ட குடியேற்ற திட்ட கிராமங்களில் வசிப்பவர்கள் இவ்வாறான துர்ப்பாக்கிய நிலையில் காணப்படுகின்றனர்.

இவ்வாறு குற்றம் சாட்டிய மக்கள் கடந்த முறை ஊரங்கு அறிவித்திருந்த போது நாடாளுமன்ற தேர்தலை அடிப்படையாக வைத்து தமக்கு உதவிய அரசியல்வாதிகள் இம்முறை தம்மை கண்டு கொள்ளாமை கவலை அளிப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

Leave A Reply

Your email address will not be published.