ஜுன் இறுதி வரை பயணக்கட்டுப்பாடு நீடிக்குமா?

0

கொவிட்-19ன் தாக்கம் இலங்கையில் வேகமாக பரவி வருவதால் அதனை கட்டுப்படுத்துவதற்காக தற்போது நடைமுறையிலுள்ள பயணக்கட்டுப்பாடு ஜுன் மாதம் இறுதி வரை நீட்டிப்பது தொடர்பாக அரசு ஆராய்ந்து வருவதாக தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.

பயணக் கட்டுப்பாடு அமுலில் உள்ள காலப் பகுதியில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கையில் சடுதியான வீழ்ச்சி காணப்படுவதால் இதனை தொடர்ந்து சில வாரங்களுக்கு நீடிக்க அரசு விரும்புவதாக கூறப்படுகின்றது.

நடமாடும் விபாயாரிகளின் சேவைகள் மற்றும் அத்தியாவசிய சேவைகளை வீடுகளின் அருகே வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. குறைந்த வருமானமுடைய மக்களுக்கு 5000 ரூபா நிவாரணம் வழங்கப்படவுள்ளது. இதர அவசர சேவைகள் இயங்கும். அதனடிப்படையில் பயணக் கட்டுப்பாட்டை நீடிக்க அரசு ஆலோசிக்கின்றது என கூறப்படுகின்றது.

வங்கிகளின் சேவைகளை குறிப்பிட்ட மணி நேரங்களுக்கு இயக்க ஆலோசிக்கப்படுகின்றது எனவும், அனைத்து அரச மற்றும் தனியார் பாடசாலைகளை மறு அறிவித்தல் வரை மூடவும் அரசு தீர்மானித்திருப்பதாகவும் எமது ஊடகத்திற்கு தகவல் கிடைக்கப்பபெற்றுள்ளது.

பயணக்கட்டுப்பாடு குறித்ததான அரசின் புதிய அறிவிப்பு ஜுன் 5 அல்லது 6ம் திகதிகளில் வெளிவரலாம் எனவும் ஊகிக்கப்படுகின்றது. எனினும் மக்கள் தமது தேவையற்ற பயணங்களை கட்டுப்படுத்துவதன் மூலம் இலங்கையிலிருந்து கொரோனா வைரஸை முற்றாக ஒழிக்கலாம் என பலரும் தமது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.