வவுனியாவில் 4 சிறுவர்கள் உட்பட 18 பேருக்கு தொற்று உறுதி

0
வவுனியாவில் 4 சிறுவர்கள் உட்பட 18 பேருக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வவுனியாவில் இனங்காணப்பட்ட கோவிட் தொற்றாளர்களுடன் தொடர்புகளைப் பேணியவர்கள் மற்றும் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட பி.சீ.ஆர் பரிசோதனையின் முடிவுகள் சில நேற்று இரவு வெளியாகின.
அதில், தோணிக்கல் பகுதியில் 2 வயது மற்றும் 9 வயது சிறுவர்கள் உட்பட 4 பேருக்கும், சிறிராமபுரம் பகுதியில் 3 வயது மற்றும் 8 வயது சிறுவர்கள் இருவருக்கும், ஹொரவப்பொத்தானை வீதியில் உள்ள இஸ்லாமிய கலாசார மண்டபம் முன்பாகவுள்ள பிரபல பலசரக்கு வர்த்தக நிலையம் ஒன்றில் இருவருக்கும், தவசிகுளம் பகுதியில் ஒருவருக்கும், நவகமுக பகுதியில் ஒருவருக்கும், திருவேகம பகுதியில் ஒருவருக்கும், நெடுங்குளம் பகுதியில் ஒருவருக்கும், வவுனியா சிறைச்சாலை கைதி ஒருவருக்கும், சிறைச்சாலை உத்தியோகத்தர் ஒருவருக்கும், தெற்கிலுப்பைக்குளம் பகுதியில் ஒருவருக்கும், ஆச்சிபுரம் பகுதியில் ஒருவருக்கும், பெரியகோமரசன்குளம் பகுதியில் ஒருவருக்கும், புளியங்குளம் பொலிஸ் நிலையத்தில் ஒருவருக்கும் என 18 பேருக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தொற்றாளர்களை கோவிட் சிகிச்சை நிலையத்திற்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், அவர்களுடன் தொடர்புடையவர்களை தனிமைப்படுத்தவும் சுகாதாரப் பிரிவினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.