எரிபொருளை இறக்குமதி செய்யும் அனுமதியை தனியாருக்கு வழங்க தயாராகும் அரசாங்கம்

0
இலங்கைக்கு எரிபொருளை இறக்குமதி செய்து, அதனை சுத்திகரித்து, விநியோகிக்கும் பணிகளை தனியார் துறையினருக்கு வழங்குவது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.
இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் தற்போது இந்த பணிகளை மேற்கொண்டு வருகிறது.
பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் தொடர்பான சட்டத்தில் திருத்தங்களை செய்த பின்னர், தனியார் துறையினருக்கு இந்த அனுமதியை வழங்க அரசாங்கம் தயாராகி வருகிறது.
இதற்கான யோசனையை துறைக்கு பொறுப்பான அமைச்சர் உதய கம்மன்பில அமைச்சரவையின் அனுமதிக்காக சமர்பித்துள்ளதாக தெரியவருகிறது.
இந்த யோசனைக்கான அனுமதி கிடைத்து, சட்டத் திருத்தம் நிறைவேற்றப்பட்ட பின்னர், தனியார் துறையினரும் பெட்ரோல், டீசல், மண் எண்ணெய் உட்பட எரிபொருகளை விற்பனை செய்யவும் மாற்று எரிபொருள் நிறுவனங்களை நடத்தவும் அனுமதி கிடைக்க உள்ளது.

Leave A Reply

Your email address will not be published.