கோவிட் வைரஸை பணம் கரக்கும் வர்த்தகமாக – சஜித் பிரேமதாச வழங்கியுள்ள அறிவுரை

0
கோவிட் வைரஸை பணம் கரக்கும் வர்த்தகமாக மாற்றிக்கொண்ட அரசாங்கம் தடுப்பூசி அரசியலை உடனடியாக நிறுத்த வேண்டும் என கோரிக்கை விடுப்பதாக ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
முழு நாட்டு பிரஜைகளை சமமாக கருதுவதற்கு பதிலாக தமது கட்சியினரின் உயிர் மாத்திரமே உயிர் என கருதி பழங்குடியின அரசாங்கம் போன்று தற்போதைய அரசாங்கம் செயற்பட்டு வருகிறது.
அரசாங்கத்தின் முழு செயற்பாடுகளும் நாட்டை கொடூரமான அனர்தத்தை நோக்கி கொண்டு செல்கிறது. இதன் காரணமாக நாட்டில் தடுப்பூசி வழங்கும் வேலைத்திட்டமும் சிக்கலுக்கு உள்ளாகியுள்ளது. தடுப்பூசி உரிய நேரத்தில் பெற்றுக்கொள்வதற்காக நிதியை ஒதுக்குவது, அதற்காக மனித வளத்திற்கு பயிற்சியளிப்பது, தடுப்பூசி விநியோகம், திட்டமிடல், யாருக்கு முன்னுரிமை வழங்குவது ஆகிய எந்த விடயத்திலும் அரசாங்கத்திடம் தெளிவான திட்டங்கள் ஆரம்பத்தில் இருந்தே இருக்கவில்லை எனவும் சஜித் பிரேமதாச வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் கூறியுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.