தடைநீக்கப்பட்டநிலையில் கட்டுநாயக்காவில் தரையிறங்கிய 29 விமானங்கள்

0
இலங்கையில் தீவிரமடைந்த கொரோனா தொற்றை அடுத்து விமான நிலையங்களுக்கு விதிக்கப்பட்ட பயணத்தடை கடந்த முதலாம் திகதி நீக்கப்பட்டது. இவ்வாறு பயணத்தடை நீக்கப்பட்டு 24 மணி நேரத்திற்குள் 2,068 பயணிகள் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தினூடாக நாட்டை வந்தடைந்ததாக விமான நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.
மேலும் குறித்த பயணிகள் 29 விமானங்களில் வருகைதந்துள்ளனர். சவுதி அரேபியாவின் ரியாத்தில் இருந்து 103 பேரும், கட்டார் டோஹாவிலிருந்து 135 பேரும், மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் துபாயிலிருந்து 116 பேரும் வந்துள்ளனர்.
இந்த காலகட்டத்தில் 69 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளும் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு வந்துள்ளதாக விமான நிலைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அனைத்து பயணிகளும் 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்படுவார்கள், அந்த நேரத்தில் அவர்களை இரண்டு பி.சி.ஆர் சோதனைகளுக்கு உட்படுத்த வேண்டியிருக்கும். மேலும், 24 மணி நேரத்தில் 963 பயணிகள் 11 விமானங்கள் மூலம் வெளிநாடுகளுக்கு சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Leave A Reply

Your email address will not be published.