கொவிட் பாதுகாப்பு நடைமுறைகளுக்கு சவாலாகி வருகிறதா திருநாவற்குளம் பகுதி?

0

வவுனியாவில் கடந்த வாரம் ஒரே நாளில் பலர் கொவிட் தொற்றுக்கு உள்ளாகியிருப்பது கண்டறியப்பட்ட நிலையில் திருநாவற்குளம் பகுதி கடும் பயணக்கட்டுப்பாடுகளை எதிர்கொண்டது. இந்நிலையில் கொவிட் தொற்றுக்கு உள்ளாகியவர்கள் உடனடியாக நோயாளர் காவு வண்டி மூலம் அழைத்துச்செல்லப்பட்ட நிலையில் அவர்களுடன் தொடர்புகளை பேணியவர்கள் பல குடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட்டன.

இருந்தும் இறுதியாக மேற்கொண்ட பி.சி.ஆர் பரிசோதனையின் போதும் சில கொவிட் தொற்றாளர்கள் குறித்த கிராமத்தில் இனங்காணப்பட்டனர். இந் நிலையில் சுகாதாரப் பிரிவால் தனிமைப்படுத்தப்பட்ட தனிமைப்படுத்தப்பட்ட சிலர் கிராமத்தில் வெளியே நடமாடுவது குறித்து மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

இதே வேளை தனிமைப்படுத்தப்பட்ட குடும்பங்களுக்கு அத்தியாவசிய சேவைகளை வழங்குவதாக சமூக செயற்பாடுகளில் ஈடுபட்டுவரும் சிலர் சுகாதார நடைமுறைகளை பின்பற்றாதிருப்பது தொடர்பாக எமது ஊடக வலையமைப்புக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள் தனிமைப்படுத்தப்பட்ட இடங்களுக்கு சுகாதார நடைமுறையை பின்பற்றாமல் செல்வதோடு, ஏனைய இடங்களுக்கும் குறிப்பாக வவுனியா நகர்ப்பகுதிக்கும் சென்று வருகின்றார்க்ள என மக்கள் தெரிவிக்கின்றனர்.

இது தொடர்பாக சுகாதார திணைக்களம் எடுக்கப்போகும் நடவடிக்கைகள் என்ன என்று மக்கள் கேள்வி எழுப்புகின்றனர். மக்கள் பெரும் சிரமத்தின் மத்தியில் கடும் பயணக்கட்டுப்பாட்டு நடைமுறையை கடைப்பிடித்து வரும் நிலையில் இத்தகையோரது செயற்பாடுகள் சமூகத்துக்கு முரணாக இருப்பதோடு, மக்கள் மத்தியிலும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.