தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய 995 பேர் கைது

0

கடந்த 24 மணிநேரத்தில் (இன்று காலையுடன்) தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய 995 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். மேலும் கைது செய்யப்பட்டவர்களில் அதிகமானோர் மாத்தளை மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் எனவும் நேற்றைய தினம் மாத்தளை மாவட்டத்தில் 138 பேரும்இ கண்டியில் 129 பேரும், மற்றும் நிக்கரவட்டியில் 75 பேரும் தனிமைப்படுத்தலை மீறியதில் கைது செய்யப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்தார். நாட்டில் கொவிட் – 19 ஐ கட்டுப்படுத்துவதற்காக தொடர்ந்து பயணக்கட்டப்பாடு விதிக்கப்பட்டிருந்தாலும் தொடர்ந்து நாட்டின் பல பாகங்களிலும் இக்கைது நடவடிக்கை தொடர்வதாக தெரிவித்த அவர் மக்கள் பொறுப்பணர்வுடன் செயற்பட வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டள்ளார்.

-யாழ் நிருபர்-

Leave A Reply

Your email address will not be published.