அதிரடியாக வழங்கப்பட்ட 2 புதிய பதவிகள்.!!!

0
இலங்கை துறைமுக அதிகார சபையின் தலைவராக செயற்பட்ட ஜெனரல் (ஓய்வு) தயா ரத்நாயக்கவுக்கு புதிய நியமனம் வழங்கப்பட்டுள்ளது. அவர், கைத்தொழில் அமைச்சின் புதிய செயலாளராக நேற்றைய தினம் நியமிக்கப்பட்டுள்ளார்.
அத்துடன், துறைமுக அதிகாரசபையின் புதிய தலைவராக நிஹால் கெப்பற்றிபொல நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பிரதி​ பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹண, உடன் அமுலுக்கு வரும் வகையில், சிரேஸ்ட பிரதி பொலிஸ்மா அதிபராக நியமிக்கப்பட்டுள்ளார்.
பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மற்றும் தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் அனுமதியுடன், பொலிஸ்மா அதிபர் சீ.டீ. விக்ரமரத்னவால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
-Copy-

Leave A Reply

Your email address will not be published.