கொரோனாவின் பின்னரான சிகிச்சைத் திட்டத்தைத் தொடங்க முடிவு!

0
கொரோனாவின் பின்னரான சிகிச்சைத் திட்டத்தைத் தொடங்க சுதேச வைத்திய முறைகளின் மேம்பாடு, கிராமிய மற்றும் ஆயுர்வேத வைத்தியசாலைகள் அபிவிருத்தி அமைச்சு முடிவு!
கொரோனா வைரஸ் (கொவிட் 19) தொற்றில் இருந்து குணமடைந்தவர்களுக்குக் கொரோனாவின் பின்னரான சிகிச்சைத் திட்டத்தைத் தொடங்க சுதேச வைத்திய முறைகளின் மேம்பாடு, கிராமிய மற்றும் ஆயுர்வேத வைத்தியசாலைகள் அபிவிருத்தி அமைச்சு முடிவு செய்துள்ளது.
ஆயுர்வேத மருத்துவத் துறையில் கொவிட் நோயால் பாதிக்கப்பட்டு மீண்ட நோயாளிகளுக்கான நோய்க்குப் பின்னரான சிகிச்சைத் திட்டத்தைத் தொடங்கத் திட்டமிட்டுள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது.
வைரஸ் தொற்றில் இருந்து குணமடைந்த பின்னரான ஏனைய நோய்த் தொற்றுகள் மற்றும் உயிரிழப்புகள் நேரிடுவதைத் தடுக்கும் நோக்குடன் இத்திட்டம் செயல்படுத்தப்படும் என்று சுதேச வைத்திய முறைகளின் மேம்பாடு, கிராமிய மற்றும் ஆயுர்வேத வைத்தியசாலைகள் அபிவிருத்தி மற்றும் சமூக சுகாதார இராஜாங்க அமைச்சர் சிசிர ஜெயக்கொடி தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.