தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவை மீறிய 637 பேர் கைது!

0
தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவை மீறிய 637 பேர் கடந்த 24 மணித்தியாலங்களில் கைது செய்யப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
முகக்கவசம் அணியாமை மற்றும் சமூக இடைவௌியைப் பேணாமை ஆகிய குற்றச்சாட்டுகளுக்கு அமைய இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகப் பொலிஸ் தலைமையகம் குறிப்பிட்டுள்ளது.
இதன்போது 41 வாகனங்களும் பொலிஸாரினால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
அதன்படி கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் தொடக்கம் இதுவரையான காலப்பகுதியில் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறியமை தொடர்பில் இதுவரை 67,979 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்தச் சோதனை நடவடிக்கைகள் தொடர்ந்தும் நாடு பூராகவும் முன்னெடுக்கப்படும் எனப் பொலிஸ் தலைமையகம் குறிப்பிட்டுள்ளது.
-Copy-

Leave A Reply

Your email address will not be published.