சமூகம்
இலங்கை அரசாங்கத்திடம் சந்தோஸ் ஜா முன்வைத்துள்ள கோரிக்கை
கடந்தகால தயக்கங்களை கடந்து பொதுவான இலக்குகளை அடைவதற்கு மனோநிலையை மாற்றி கொள்ள வேண்டும்
கொழும்பில் இடம்பெற்ற இலங்கை பட்டயக்கணக்காளர் நிறுவனத்தின் 45ஆவது தேசிய மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது, “இந்தியா, இலங்கையில் 60 மானியத் திட்டங்களை நிறைவு செய்துள்ளதுடன், தற்போது மேலும் 16 திட்டங்களை செயற்படுத்தி வருகின்றது. முதலீடுகள் மற்றும் மானியங்கள் மூலமான உதவி அதிகரித்துள்ள நிலையில், கடன் திட்டங்கள், ஒப்பீட்டளவில் குறைவாகவும் வருகின்றது.
இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையிலான வலுவான பங்காளித்துவம் அவசியமானதாகும். இலங்கையின் கடன் மறுசீரமைப்பு முயற்சிகள், சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவைப் பெறுதல் மற்றும் உடனடி சவால்களை சமாளிக்க இருதரப்பு நிதி உதவியை வழங்குதல் ஆகியவற்றுக்கான ஆதரவு தொடர்பில் இந்தியா உறுதியளிக்கின்றது.