தொழில்நுட்பம்

ரூ.70,000 -க்கும் குறைவாக Ex showroom விலையில் விற்கப்படும் பைக் மொடல்கள்

ரூ.70,000-க்கும் குறைவான எக்ஸ்-ஷோரூம் விலையில் விற்கப்படும் பைக் மொடல்கள் என்னென்ன என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

ஹீரோ எச்எஃப் 100 (Hero HF 100)

இந்தியாவில் விலை குறைவான பைக் மொடல்களில் ஹீரோ எச்எஃப் 100 (Hero HF 100) பைக்கும் ஒன்றாகும். இந்த பைக்கானது ரூ.56,818 என்ற விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இது சென்னை எக்ஸ்-ஷோரூம் விலையாகும்.

தினசரி பயன்பாட்டிற்கு பயன்படும் இந்த பைக்கானது லிட்டர் ஒன்றிற்கு 65 கிமீ வரையில் மைலேஜ் (Mileage) தரும்.

டிவிஎஸ் ஸ்போர்ட் இஎஸ் (TVS Sport ES)

இந்தியாவில் விலை குறைவான பைக் மொடல்களில் இரண்டாவது இடத்தை டிவிஎஸ் ஸ்போர்ட் இஎஸ் (TVS Sport ES) மொடல் பைக் பிடித்துள்ளது.

இந்த பைக்கானது ரூ.66,920 என்கிற ஆரம்ப விலையில் இருந்து விற்பனையாகிறது. இது சென்னை எக்ஸ்-ஷோரூம் விலையாகும். இது லிட்டர் ஒன்றிற்கு 83.9 கிமீ வரையில் மைலேஜ் (Mileage) தரும் என்று கூறப்படுகிறது.

ஹீரோ எச்எஃப் டீலக்ஸ் (Hero HF Deluxe)

விலை குறைவான பைக் மொடல்களில் மூன்றாவது இடத்தை ஹீரோ எச்எஃப் டீலக்ஸ் (Hero HF Deluxe) மொடல் பைக் பிடித்துள்ளது. இந்த பைக் மாடலின் ஆரம்ப விலை ரூ. 62,468 ஆகும். இந்த பைக்கானது 4 வேரியண்ட்களில் கிடைக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button