சுகாதார பாதுகாப்பு முறைகளுடன் ஆரம்பமாகியது வவுனியா தாண்டிக்குளம் ஐயனார் ஆலய வருடாந்த உற்சவம்

0
தாண்டிக்குளத்தில் எழுந்தருளிய ஐயனார் ஆலயத்தில் கருவறையில் இருந்த விக்கிரகத்தில் இருந்து 19.08.2001 ஆவணி முதல் ஞாயிறு அன்று  கண்ணீர் கசிய ஆரம்பித்தது. அன்றைய அற்புத நிகழ்வின் பின்னர் அருள்மிகு அற்புத ஐயனார் என அழைக்கப்படும் குறித்த ஆலயத்தின் 2021 க்கான வருடாந்த அலங்கார உற்சவம் ஆரம்பமாகியுள்ளது.
தற்போதைய கொவிட் – 19 தாக்கம் இலங்கையில் அதிகமாக பரவிவரும் நிலையில் ஆலயத்தில் மக்கள் கூடாத வகையில் ஆலய கிரியை விதிகளின்படி வருடாந்த அலங்கார உற்சவம் ஆரம்பமாகியுள்ளது.
பல அற்புதங்களை நிகழ்த்திய குறித்த ஆலயத்தின் நிகழ்வுகள் தொடர்பாக அவ் ஆலயத்தின் பொருளாளர் திரு.க.இரங்கநாதன் அவர்கள் எமது ஊடகத்துக்கு மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்க விடயம்.

Leave A Reply

Your email address will not be published.