ஆனந்தபுரி பொது விளையாட்டு மைதானம் தொடர்பில் பொதுமக்கள் ஈபிடிபி முரண்பாடு

0

திருகோணமலை நிலாவெளி வீதியில் உள்ள ஆனந்தபுரி பொது மைதானத்தில் ஒரு பகுதியை 10-01-2021 நண்பகல் ஈபிடிபி கட்சியின் அங்கத்துவர்கள் என அடையாளப்படுத்திக்கொண்ட ஒரு குழுவினர் கொங்ரீட் தூண்களை போட முயற்சித்தவேளை ஆனந்தபுரி பிரதேசவாசிகளால் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

இதனால் பொது மக்களுக்கும் ஈபிடிபி என அடையாளப்படுத்திக்கொண்டவர்களுக்கும் இடையில் முரண்பாடு தோன்றியதுடன் கைகலப்பும் ஏற்பட்டது.

இருந்தும் ஈபிடிபி என தம்மை அடையாளப்படுத்திக்கொண்டவர்கள் தமது முயற்சியை தெடர்ந்து மேற்கொள்ள முற்பட்டனர். இருந்தும் பிரதேசவாசிகள் தொடர்ந்து எதிர்ப்பு வெளியிட்டதால் தமது நடவடிக்கையை கைவிட்டு அங்கிருந்து அகன்று சென்றுள்ளதாக திருகோணமலையில் இருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.

Leave A Reply

Your email address will not be published.