கிழக்கு மாகாணத்தின் 13 உள்ளூராட்சி மன்ற தவிசாளர்களுக்கு தமது அதிகாரத்தை பயன்படுத்த தடை

0

வரவு செலவுத் திட்டம் தோற்கடிக்கப்பட்டமை மற்றும் சபை தவிசாளர்கள் மீதான குற்றச்சாட்டு ஆகியவற்றின் அடிப்படையில் கிழக்கு மாகாணத்திலுள்ள பிரதேச சபைகள், நகரசபைகள் அடங்கலாக 13 உள்ளூராட்சி மன்றங்களின் தலைவர்களுக்கு அதிகாரத்தை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஏறாவூர்இ அம்பாறை ஆகிய நகர சபைகளின் தலைவர்களுக்கும் பொத்துவில், இறக்காமம், பதியத்தலாவ, மண்முனை, வாகரை, வாழைச்சேனை, ஏறாவூர்பற்று, சேருவில, தம்பலகாமம், திருகோணமலை பட்டினமும் சூழலும், மொரவெவ ஆகிய பிரதேச சபைகளின் தலைவர்களுக்கும் இந்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

– திருகோணமலை செய்தியாளர் –

Leave A Reply

Your email address will not be published.