சல்லி மீன்பிடி இறங்கு துறை புனரமைப்புக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களினால் முதற்கட்ட பணிகள் ஆரம்பம்

0

திருகோணமலை, சல்லி அம்மன் மீன்பிடி இறங்குதுறை புனரமைப்பு முதற்கட்டப் பணிகளை நேற்று (10.01.2021) கடற்றொழில் அமைச்சரும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமுமான டக்ளஸ் தேவானந்தா அவர்கள் ஆரம்பித்து வைத்தார்.

சல்லி அம்மன் கோயில் இறங்கு துறையை வாழ்வாதாரமாகக் கொண்டு சுமார் 750 குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில்இ குறித்த இறங்கு துறை சீராக தூர்வாரி புனரமைக்காமையினால் பல்வேறு அசௌகரியங்கள் எதிர்கொள்ளப்படுகின்றன. இவ்விறங்கு துறைக்கு கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வழங்கிய ஒத்துழைப்புக்களின் மூலம் முதற் கட்டமான வேலைகள் ஆரம்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

-திருகோணமலை செய்தியாளர்-

Leave A Reply

Your email address will not be published.