ஜமாலியா பிரதான வீதி மக்கள் பாவனைக்காக திறக்கப்பட்டுள்ளது

0

திருகோணமலை ஜமாலியா பிரதான வீதி கடந்த 21-12-2020 முதல் கொவிட் – 19 காரணமாக மூடப்பட்டு இருந்தது. கடந்த 20-12-2020 அன்று திருகோணமலை நகரில் இருக்கும் மாட்டிறைச்சிக்கடை வைத்திருக்கும் நபர் ஒருவரிற்கு கொரோனா (கொவிட் – 19) தொற்று உறுதியாகியமையை தொடர்ந்து அவர் வசிக்கும் ஜமாலியாப் பகுதியில் நடத்தப்பட்ட PCR முடிவுகளின் அடிப்படையில் ஜமாலியா முற்றாக மூடப்பட்டது.

இதனால் மூன்றாம் கட்டை ஊடாக பயணிக்கும் வாகனங்கள் முதற்கொண்டு அனைவரும் லிங்கநகர் மட்டிக்களி வீதியைப் பயன்படுத்தி வந்தனர். இதனால் வாகன நெரிசல்களுக்கு முகங்கொடுத்து மக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகிய நிலையில் 08.01.2021 மாலை 03மணி அளவில் ஜமாலியா பிரதான வீதி மட்டும் திறக்கப்பட்டு மக்களின் பாவனைக்கு விடப்பட்டுள்ளது. இருப்பினும் இன்னும் ஜாமாலியா உட்புற விதிகள் எதுவும் திறக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

– திருகோணமலை செய்தியாளர் –

Leave A Reply

Your email address will not be published.