பலத்த காற்றினால் செங்காராத்திமோட்டை ஆலயம் சேதம்

0

வவுனியா நகரிலிருந்து சுமார் 35 கிலோமீட்டர் தொலைவில் உள்ள செங்காராத்திமோட்டை என்ற கிராமத்தில் ஆதி விநாயகர் ஆலயம் அமைந்துள்ளது. இவ் ஆலயம் மிகுந்த அருளுடையதாகவும், பாரம்பரியமானதும் என தெரிவிக்கப்பட்டுகின்றது.

இன்று (26.05.2021) அப்பகுதியில் வீசிய பலத்த காற்றினால் ஆதி விநாயகர் ஆலயததின் அருகில் இருந்த மரம் ஒன்று சாய்ந்து வீழ்ந்துள்ளது. அதில் ஆலயத்தின் கூரை பாதிக்கப்பட்டதுடன் மின் இணைப்புப் சேதமடைந்து துண்டிக்கப்பட்டது.

கிராமத்தினர் மின்சார சபையுடன் தொடர்பு கொண்டதையடுத்து மீளவும் மின் இணைப்பு மின்சார சபையால் சரிசெய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

தற்போது வீசி வரும் பலத்த காற்றினால் அபாயங்களை ஏற்படலாம் என்றும் மக்கள் அவதானத்துடன் செயற்பட வேண்டும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

-சாணக்கியன்-

Leave A Reply

Your email address will not be published.