புதிய சட்டமா அதிபராக பதவியேற்றார் சஞ்சய் ராஜரட்ணம்

0

ஜனாதிபதி சட்டத்தரணி சஞ்சய் ராஜரட்ணம் புதிய சட்டமா அதிபராக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் நேற்று பதவியேற்றார்.

இவர் இலங்கையின் 48ஆவது சட்டமா அதிபராவார். சட்டமா அதிபர் தப்புல டி லிவேரா கடந்த 24ஆம் திகதியுடன் தமது பதவியிலிருந்து ஓய்வு பெற்றார்.

இதையடுத்து சஞ்சய் ராஜரட்ணத்தை புதிய சட்டமா அதிபராக நியமிக்க ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் நாடாளுமன்ற பேரவைக்கு யோசனை முன்வைக்கப்பட்டு நாடாளுமன்ற பேரவை இணக்கம் வெளியிட்டமை குறிப்பிடத்தக்கது.

(பிரதி)

Leave A Reply

Your email address will not be published.