மின்னல் வேகத்தில் முடக்கப்பட்டது திருநாவற்குளம் – பொலிசார் குவிப்பு

0

அண்மையில் திருநாவற்குளம் பகுதியில் கொரோனா தொற்று காரணமாக ஒரு பெண் உயிரிழந்துள்ள நிலையில் இன்று மேலும் 9 பேருக்கு கொரோனா தொற்று இருப்பதாக பி.சி.ஆர் பரிசோதனையில் கண்டறியப்பட்டது.

இதனைத் தொடர்ந்து இன்று (29.05.2021) காலை தொடக்கம் சுகாதார பரிசோதகர் குழு திருநாவற்குளம் பகுதியை ஆய்வு செய்திருந்தனர். பயணக்கட்டுப்பாடு விதிக்கப்பட்டும் மக்கள் பூரணமாக ஒத்துழைக்காமையால்  அவசரஅவசரமாக அப் பகுதி முற்றாக முடக்கப்பட்டது.

மேலும் திருநாவற்குளம் கிராமத்துக்குள் நுழையும் 1ம் ஒழுங்கை முதல் 5ம் ஒழுங்கை வரையும், பட்டாணிச்சூர் – திருநாவற்குளம் பகுதியை இணைக்கும் பாதை என கிராமத்துக்குள் உள்நுழையும் சகல பாதைகளும் மூடப்பட்டு கடும் போக்குவரத்து தடை விதிக்கப்ட்டுள்ளதுடன் பொலிசார் மற்றும் இராணுவம் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

அத்துடன் அனுமதியின்றி வெளியே நடமாடுபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பொலிசார் எச்சரித்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.