இரண்டாவது தடுப்பூசி தேவையா? – அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல

0
ரஷ்யாவின் ஸ்புட்னிக் தடுப்பூசியின் முதலாவது தடுப்பூயில் அதிகளவான நோய் எதிர்ப்பு சக்தி கிடைப்பதால், இரண்டாவது தடுப்பூசி தேவையா இல்லையா என்பது குறித்து கலந்துரையாடப்பட்டு வருவதாக ஊடகத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
கண்டி மாவட்டத்தில் நேற்று கோவிட் தடுப்பூசி போடும் வேலைத்திட்டத்தை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வில் கலந்துக்கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
இரண்டாவது தடுப்பூசி சம்பந்தமாக தற்போது கலந்துரையாடப்பட்டு வருகிறது. பேராசிரியர் நீலிகா உட்பட சம்பந்தப்பட்ட தொழிற்நுட்ப குழுவினர் இரண்டாவது தடுப்பூசி அவசியமா என்பது குறித்து கலந்துரையாடி வருகின்றனர்.
ஸ்புட்னிக் தடுப்பூசியின் முதலாவது தடுப்பூசியிலேயே நோய் எதிர்ப்பு சக்தி உயர் மட்டத்தில் இருப்பதாக கூறுகின்றனர். எனக்கு கிடைத்த தகவல்படி ஸ்புட்னிக் தடுப்பூசி 6 மாதம் வரை செல்லுப்படியாகும்.
எனக்கு சரியாக தெரியாது. அனைத்தும் மிகவும் குழப்பமான நிலைமையிலேயே இருக்கின்றன. இது மிக இலகுவாக விடுப்படக் கூடியது அல்ல எனவும் கெஹெலிய ரம்புக்வெல்ல குறிப்பிட்டுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.