முன்பள்ளி ஆசிரியர்களுக்கு மாதாந்தக் கொடுப்பனவு 2,500 ரூபா

0
ஜூன் முதலாம் திகதி முதல் (இன்று) தகுதி பெறும் முன்பள்ளி ஆசிரியர்களுக்கு 2,500 ரூபா மாதாந்தக் கொடுப்பனவை வழங்குவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
‘நாட்டைக் கட்டியெழுப்பும் சுபீட்சத்தின் நோக்கம்’ கொள்கைப் பிரகடனத்திற்கமைய, முன்பள்ளி ஆசிரியர்களை மனிதவள அபிவிருத்தியில் முக்கிய பங்கு வகிக்கும் தரப்பினராக அடையாளங்காணப்பட்டு, முன்பள்ளி ஆசிரியர்களுக்கு குறிப்பிட்ட திட்டவட்டமான பயிற்சிகளை வழங்கிய பின்னர் அவர்களுக்கு நிரந்தரக் கொடுப்பனவை வழங்குதல் தொடர்பாக விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
அதற்கமைய, முன்பள்ளி ஆசிரியர்களுக்கு தற்போது செலுத்தப்பட்டு வரும் 250 ரூபா மாதாந்தக் கொடுப்பனவை 2,500 ரூபாவாக அதிகரிப்பது உகந்ததென அரசாங்கத்தினால் அடையாளங் காணப்பட்டுள்ளது.
அதற்காக, 2021 ஜூன் மாதம் 01 ஆம் திகதி தொடக்கம் நடைமுறைக்கு வரும் வகையில் அரசாங்கத்தால் முன்பள்ளி ஆசிரியர்களுக்கு செலுத்தப்பட்டு வரும் 250 ரூபா மாதாந்தக் கொடுப்பனவு, அடையாளங் காணப்படும் குறிகாட்டிகளுக்கமைய தகுதி பெறும் முன்பள்ளி ஆசிரியர்களுக்கு 2,500 ரூபா வரை அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதன் முதற்கட்டமாக 25,000 முன்பள்ளி ஆசிரியர்களுக்கு குறித்த கொடுப்பனவை வழங்குவதற்கும் கல்வி அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.