வட மாகாணத்தின் பல்வேறு பகுதிகளில் இன்று முதல் மின்தடை அமுல் !

0
வட மாகாணத்தின் பல்வேறு பகுதிகளில் இன்று முதல் ஒரு மாத காலத்திற்கு கட்டம் கட்டமாக மின்தடை அமுல்படுத்தப்படவுள்ளது. குறித்த பகுதிகளில் காணப்படும் மின்விநியோக மார்க்கங்களின் கட்டமைப்பு மற்றும் பராமரிப்பு பணிகள் மின் விநியோகத்தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக இலங்கை மின்சாரசபை தெரிவித்துள்ளது.
இதற்கமைய, யாழ் மாவட்டத்தின் ஜம்புகோளப்பட்டினம், காட்டுப்புலம், குசுமாந்துறை, மாதகல் மற்றும் மாதகல் இறங்குதுறை ஆகிய பகுதிகளில் இன்று முற்பகல் 8 மணி முதல் பிற்பகல் 5 மணி வரை மின் விநியோகத்தடை அமுல்படுத்தப்படவுள்ளது.
அத்துடன், குறித்த காலப்பகுதியில் வவுனியா மாவட்டத்தின் பம்பைமடு, செக்கட்டிப்புலவு வீடமைப்புத்திட்டம், கற்பகபுரம், மூன்று முறிப்பு, பெரியகாடு, பூவரங்குளம், சாளம்பைக்குளம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் இவ்வாறு மின் விநியோகத்தடை அமுல்படுத்தப்படவுள்ளது.
இந்த நிலையில், நாளைய தினம் (02) யாழ் மாவட்டத்தின் இளவாலை, மாரீசன்கூடல், மெய்கண்டான், பெரியவிளான், சேந்தன்குளம் ஆகிய பகுதிகளில் முற்பகல் 8 மணி முதல் பிற்பகல் 5 மணி வரை மின் விநியோகத்தடை அமுல்படுத்தப்படவுள்ளது.
அத்துடன், குறித்த காலப்பகுதியில், வவுனியா மாவட்டத்தின் அக்போபுர, கொக்கெலிய, மகாமயிலங்குளம், நொச்சிமோட்டை, பரன்னாட்டன்கல், ஓமந்தை, புதியசின்னக்குளம், சமணங்குளம், சாந்தசோலை, தரணிக்குளம் ஆகிய பிரதேசங்களிலும் இவ்வாறு விநியோகத்தடை அமுல்படுத்தப்படவுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.