கொழும்புக்கு போலி ஆவணங்களோடு வந்தால் 5 வருடங்கள் சிறைத்தண்டனை

0
கொழும்பில் தொழில் செய்யும் நிறுவனங்கள் அழைத்ததாக போலி அழைப்பு கடிதத்தை காட்டி நகரத்திற்குள் வரும் நபர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக பொலிஸார் எச்சரித்துள்ளனர்.
அவ்வாறு சட்டத்தை மீறும் குற்றச்சாட்டுகளின் கீழ் 5 வருடங்கள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவிததுள்ளார்.
நிறுவனங்களால் வழங்கப்பட்தாக கூறப்படும் கடிதங்கள் அனைத்தும் வீதி போக்குவரத்து கடமையில் ஈடுபடும் பொலிஸ் அதிகாரிகளினால் புகைப்படம் எடுக்கப்படும். பின்னர் தொழில் செய்யும் இடங்களில் இந்த நபர்கள் தொழில் செய்கின்றார்களா என ஆராய்ந்து பார்ப்பதாகவும், அவர்கள் அந்த இடத்தில் தொழில் செய்யவில்லை என்றால், கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
இதற்கு மேலதிகமாக அவ்வாறு சட்டத்தை மீறும் நபர்களுக்கு 5000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும். தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறும் நபர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
போலியான ஆவணங்கள் சமர்ப்பித்து பாரிய அளவிலான மக்கள் கொழும்பு நகரத்திற்கு நுழைவதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.