கோதுமை மாவின் விலைகள் அதிகரிப்பு; உணவுப் பொருட்களின் விலைகளும் அதிகரிக்க வாய்ப்பு.

0
கோதுமை மா மற்றும் பிஸ்கட் தயாரிப்புக்காக பயன்படுத்தப்படும் கோதுமை மா என்பவற்றின் விலையை பிரீமா நிறுவனம் அதிகரித்துள்ளது. கடந்த 01 ஆம் திகதி முதல் அமுலாகும் வகையில் இந்த அதிகரிப்பு செய்யப்பட்டுள்ளது.
இதற்கமைய ரொட்டிக்கான கோதுமை மா ஒரு கிலோகிராம் 4 ரூபாவினாலும், பிஸ்கட் தயாரிப்புக்கு பயன்படுத்தப்படும் கோதுமை மா ஒரு கிலோகிராம் 6 ரூபாவினாலும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக பிரீமா நிறுவனத்தின் வர்த்தக பிரதிநிதிகள் தெரிவித்தனர்.
இதன்படி, ரொட்டிக்கான கோதுமை மாவினால் தயாரிக்கப்படும் கொத்து, பரோட்டா போன்ற உணவு வகைகளினதும் பிஸ்கட் வகைகளினதும் விலை அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் நிலவுகின்றன.
உலக சந்தையில் இந்த மா வகைகளின் விலை அதிகரித்தமையினால் இவ்வாறு உள்நாட்டில் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக பிரீமா நிறுவனம் அறிவித்துள்ளது.
எவ்வாறாயினும் விலை அதிகரிப்புக்கான கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ள போதிலும் பிரீமா நிறுவனத்திற்கு அதற்கான அனுமதி வழங்கப்படவில்லை என நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் லசந்த அலகியவன்ன தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.