பயணத் தடை அனுமதியை துஸ்பிரயோகம் செய்வோர் மீது கடும் நடவடிக்கை!

0
பயணத்தடை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள நிலையில் அத்தியவசிய தேவைகளுக்காக பயணிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டவர்கள் தமது அனுமதியினை துஸ்பிரயோகம் செய்வதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். பொலிஸ் தலைமையகத்தில் இன்றைய தினம் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர், நாட்டில் பயணக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ள நிலையில் அத்தியவசிய தேவைகளுக்கு பயணிப்பதற்கு சிலருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால் அந்த அனுமதியினை சிலர் துஸ்பிரயோகம் செய்துவருகின்றமை தெரியவந்துள்ளது.
இந்த நிலையில் மன்னாரைச் சேர்ந்த நபர் ஒருவருக்கு கோழி மற்றும் முட்டைகளை ஏற்றிச் செல்வதற்கு அனுமதி வழங்கப்பட்ட நிலையில் சந்தேக நபர் கஞ்சாவினை சட்டவிரோதமாக கடத்த முற்பட்டுள்ளார்.
எனவே பொலிஸார் அவரை கைது செய்து குற்றவியல் சட்டத்தின் கீ்ழ் வழக்கு தாக்கல் செய்துள்ளனர். எனவே பயணத்தடைக் காலத்தில் வழங்கப்பட்டுள்ள விசேட அனுமதியினை துஸ்பிரயோகம் செய்பவர்கள் கைது செய்யப்படுவதுடன், அவர்கள் பயணிக்கும் வாகனங்களும் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
-Copy-

Leave A Reply

Your email address will not be published.