பயணத் தடை தொடர்பான புதிய தகவல்.

0

இந்த வாரத்தில் பெற்றுக்கொள்ளப்படும் Pஊசு பரிசோதனைகளின் பெறுபேறுகளை அடிப்படையாகக் கொண்டே பயணத் தடை நீடிப்பு தொடர்பிலான இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் என சுகாதார சேவைப் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் னுச.அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.

கொரோனா தொற்றின் மூன்றாவது அலையை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரும் நோக்கில் கடந்த 21ம் திகதி அமுல்படுத்தப்பட்ட பயணத் தடையைஇ கடந்த 7ம் திகதி தளர்த்த திட்டமிடப்பட்ட போதிலும் நிலைமை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்படாமையினால் எதிர்வரும் 21ம் திகதி வரை பயணத் தடை நீடிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறான நிலையில், நாளாந்தம் சுமார் 2300ற்கும் அதிகமான தொற்றாளர்கள் பதிவாகி வருகின்றனர். நாட்டிலுள்ள 25 மாவட்டங்களிலும் நேற்றைய தினம் கொரோனா தொற்றாளர்கள் பதிவாகியிருந்தனர். நாளாந்தம் அடையாளம் காணப்பட்ட கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை குறைவடைந்திருந்த போதிலும், கொரோனா உயிரிழப்புக்களில் அதிகரிப்பு ஏற்பட்டிருந்தது. இவ்வாறான நிலையிலேயே பயணத் தடை எப்போது தளர்த்தப்படும் என்ற கேள்வி பலருக்கும் இருந்து வருகின்றது. இந்த கேள்விக்கு பதிலளித்த போதே சுகாதார சேவை பணிப்பாளர் இதனைக் கூறியுள்ளார்.

Copy-

Leave A Reply

Your email address will not be published.