குறைக்கப்படுகிறது யாழ் மாவட்டத்திற்கான நாடாளுமன்ற உறுப்புரிமை!

0
யாழ் மாவட்டத்திற்குரிய நாடாளுமன்ற ஆசனம் ஒன்று குறைக்கப்பட்டு அதனை கம்பஹா மாவட்டத்திற்கு வழங்கவுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அதனடிப்படையில், 2020ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பெயர் பட்டியலுக்கமைய யாழ்ப்பாணத்தில் இருந்து தெரிவாகின்ற நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை குறைவடைகிறது என தேர்தல் ஆணைக்குழுவின் தவிசாளர் சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதன்படி, யாழ்ப்பாண மாவட்டத்திற்கான நாடாளுமன்ற உறுப்பினர் எண்ணிக்கை 7இல் இருந்து 6ஆக குறைவடைகிறது.
மேலும் இந்த உறுப்புரிமையை கம்பஹா மாவட்டத்திற்கு வழங்கப்படுவதன் ஊடாக, அங்கிருந்து தெரிவாகின்ற நாடாளுமன்ற உறுப்பினர் எண்ணிக்கை 18இல் இருந்து 19ஆக அதிகரித்துள்ளது.
-Copy-

Leave A Reply

Your email address will not be published.